தினம் ஒரு சிந்தனை - 1
தினம் ஒரு சிந்தனை - 1:
18.2.2025
சமுதாயம் மனநிறைவளிக்கக் கூடிய வகையில் இல்லை என்பதை விளக்க விரிவாக விவரிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவில்லை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இங்கு பெரிய அளவில் பொருள் வேட்டையாடும் வல்லவர்கள் வகுத்ததே சட்டம் என்கின்ற அளவிற்கு உள்ளதால் நல்லவர்களும் எளியோர்களும் நாளும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பது யாரும் மறுக்க முடியாததாகும்.
இந்த கேடுகெட்ட சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இன்று நல்லோர்கள் மத்தியில் நாளும் எழும் சிந்தனையாகும்.
அப்படிப்பட்ட சிந்தனைகளை தான் நானும் இனி நாளும் ஒரு சிந்தனை என்று எழுதி வர இருக்கின்றேன்.
அன்புடன் படியுங்கள்!
ஆதரவு தாருங்கள்!
என்றும் அன்புடன்
உங்கள் அன்பன்
விடியல் குகன் (எ) கு. கருணாநிதி,
முன்னாள் மாவட்ட நீதிபதி,
இணைத் தலைவர், தமிழ்நாடு அன்பு வழி அறப்பணி மன்றம்,
நாமக்கல்.

Comments
Post a Comment